பக்கம்:திருவருட் பயன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ' ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட் டெனுள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ’’ (திருவாசகம்-232) எனவரும் திருவாசகத்தாலும் அறியப்படும். 'அன்றியும் திருவள்ளுவர், யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346) என்பதும் அறிக’ (சிவப். 80 உரை) என அறிவுறுத்துவர் மதுரைச் சிவப்பிரகாசர். தெய்வப்புலவர் திருவள்ளுவர் யான் எனச் சுட்டிய செருக்கினே ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் என்ற தொடராலும், 'எனது” எனச்சுட்டிய செருக்கினே போக நுகர்வெந் தொழிலும்’ என்ற தொடராலும் இந்நூலாசிரிய ராகிய உமாபதி தேவர் விரித்துரைத்த நயம் உணர்ந்து போற்றத் தக்கதாகும். முற்றுணர்வின கிைய இறைவனுடனே பொருந்தியவர் கள், அவன் செய்யும் செயல்களைச் செய்யாரோ? என வினவிய மானக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 93. எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவரொன் றல்லா தறியார் அற. இ~ள்: இயல்பின்ை முழுவது உம் உணரும் ஞான மானது வெளிப்பட்டுத் தம்மை இரண்டறக் கலந்து கிம்பினும் இவ்விடத்த இந்தச் சிவன் முத்தானவர் ஆனக்க ஞானம் ஒன்றுமேயன்றிப் பிறிதொரு பொருளினையும் சிறிதம் அறிதல் செய்யார்.