பக்கம்:திருவருட் பயன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கம், இக்குறட்பாவுக்கும் ஏற்புடையதாய் அமைந்திருத்தல் ஈண்டு அறியத்தக்கதாகும். 'உயிர்க்குயிராயிருக்கிற கர்த்தாவென்றும் அது தானே ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்ததென்றும் ஒருதன்மை யாய்க் காண்கிற பெயர்களுக்கு இகழ்கிற முறைமை சற்றும் இல்லை” என்பது இக்குறளுக்கமைந்த சிந்தனையுரையாகும். எனவே, உயிர்க்குயிராயிருக்கிற சிவம் என்றும், அதுவே மாலற நேயம் மலிந்தவர் வேடமாகப் புறத்தே எழுந்தருளிய தென்றும் இறைவனேயும் அவனடியார்களையும் ஒரு தன்மை யாகக்காணும் மெய்யுணர்வுடைய சிவஞானிகளுக்குச் சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுக் குலம் குற்றம் முதலியன பற்றி இகழும்முறை சிறிதும் இல்லையென்றாயிற்று. ‘' எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்டபோது உகந்தடிமைத் திறம் நினைந்தங் குருதிநோக்கி ‘இவர்தேவர், அவர்தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிந்திசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றப்பூர் நடுதறியைக் காணலாமே" (6-51-3) எனவும், நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை” எனவும், (3–120–6 ) சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் - tதிருவாசகம்)