பக்கம்:திருவருட் பயன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 'பல்லுயிரனேத்தையும் ஒக்கப் பார்க்கும் நின் செல்வக் கடவுட் டொண்டர் வாழ்வும்’ q (பதினேராந்திருமுறை) எனவும் வரும் அருளாசிரியர் அனுபவ மொழிகள் இங்கு ஒப்ப வைத்து உணரத்தக்கனவாகும். ' உள்ளும் புறம்பும் நினைப்பறின் உன்னுள்ளே மொள்ளா அமுதாமென் றுந்தீபற - முளேயாது பந்தமென் றுந்தீபற’ (26) எனவரும் திருவுந்தியாரின் சொல்லமைப்பினே அடியொற்றி இக்குறள் வெண்பா அமைந்துள்ளமை அறியத்தக்கதாகும். இவ்வாறு அகத்தும் புறத்தும் சிவமே காணும் தன்மை யினராய்ச் செயலற்றிருப்பார் தம் செயலறுதியால் எய்தும் பயன் யாது? என வினவிய மாணுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 97. உறுக்தொழிற்குத் தக்க பயன்உலகம் தத்தம் வறுக்தொழிற்கு வாய்மை பயன். இ-ள். தன்னையாற்றிய தலைவரைப் பின்தொடர்ந்து சூழும் யான் எனது என் துஞ் செருக்காம் செய்யப்பட்ட வினைக்கு ஏற்ற பயனவது உனக வாழ்க்கைகள். செருக்கினே நீங்கித் தம்மை யிகழ்ந்தோர் செய்யுந் தானங் தவ முதலிய தொழிற்கு வரும் பயனவது அழிவில்லாத வீட்டின்பமே என்க. தக்க பயன் என்றதனுல் பயன் பலவாயிற்.அ. வறுக் தொழில் என்று அருளிச் செய்தார், தொடர்ந்து பயன் வழங்காமையின்,