பக்கம்:திருவருட் பயன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

என்றும் வரும் நூற்பாக்களில், எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார்."அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம்மெய்கட்கு இசைந்த ஒசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மை யுடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் நிற்குந் தன்மையும் போல’ எனவும், ‘இறைவன் இயங்குதிணைக் கண்னும் நிலத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தது. 'அகரமுதல' என்னுங் குறளான் 'அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம்' என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க” எனவும் தொல்காப்பிய முதற் சூத்திரவுரையில் நச்சினர்க்கினியர் அகரத்தைப்பற்றிக் கூறிய கருத்துக்கள், திருக்குறள் முதலதிகாரத்தின் முதற்குறளின் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம்.

இத்திருக்குறட் பொருளை,

    “அகரமுதலானை அணியாப்பனுாரானை’ (1-83-5)
எனத் திருஞானசம்பந்தரும்,
    “ஆனத்தின் முன்னெழுத்தாய் நின்றார்போலும்’(6.28.1)
எனத் திருநாவுக்கரசரும்,
   "அகரமுதலின் எழுத்தாகி நின்றாய்” (7-1-7)
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/28&oldid=514310" இலிருந்து மீள்விக்கப்பட்டது