பக்கம்:திருவருட் பயன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

   “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்'
                        (சிவஞானசித்தியார். சுபக் 165)

எனவும்,

  "சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடுசேரின்
   எத்தொழிலும் வல்லதாம்' (செளந்தரியலகரி)

எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுணரப்படும்.

இங்கனம் அம்மையப்பனாய் நின்று அருள்புரியும் இறைவ னொருவனையன்றியும் உயிர்கட்குத் துணைசெய்வார் வேறு கடவுளரும் உளரோ என ஐயுற்ற மாணாக்கர்க்கு, அவனை யொப்பார் ஒருவருமிலர் எனவும், அவ்விறைவன் தன்னை யொப்பாரையில்லாத் தலைமகன் எனவும் அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும்.

    3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்
       அருமைக்கும் ஒப்பின்மை யான். 

இ-ள்: எவ்விடத்தும் உளதாய நிறைவினாலும், நேர்மையினாலும், மிகுந்த கருணையினாலும், ஒருத்தராற் பெறுதற்கு அருமையினாலும் ஆய இந்நான்கினுந் தனக்கோர் ஒப்புவமை யில்லாதான் முன்னம் கிளந்த எம்மிறைவன் என்க.

இவ்வாற்றான் தனக்கு உவமன் இல்லானாகவே மற்றனைத்தியல்பினாலும் ஒப்பிலனாதல் உய்த்துணர்க. 'அண்டப்பகுதியி னுண்டைப் பிறக்கம், அளப்பருந் தன்மை வளப்பெருங்காட்சி, ஒன்றனுக்கொன்று நின்றெழில்பகரின், நூற்றொருகோடியின் மேற்படவிரிந்தன, இன்னுழைகதிரின் துன்னணுப்புரையச் சிறியவாகப் பெரியோன்’ எனவும், பெருமைக்கு அண்டம் அணுத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/33&oldid=514313" இலிருந்து மீள்விக்கப்பட்டது