பக்கம்:திருவருட் பயன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஒத்தது, உயர்ந்தது என இருவகையாகப்பகுத்து, ஒத்ததனை ஒப்பு எனவும், உயர்ந்ததனை உவமன் எனவும் வழங்குவர் சான்றோர். அம்முறையில் இறைவனுக்கு ஒப்புக்கூறுங்கால் அவனுக்கு உயர்ந்தாருமில்லை ஒப்பாருமில்லை என்பதனைத்திருமுறையாசிரியர்கள் இனிது விளக்கியுள்ளார்கள்.

     'தன்னொப்பாரில்லாத தூயவன் (1–113–2)
     "தன்னேர்பிறரில்லானே'        (2-62-3)
    என ஆளுடையபிள்ளேயாரும்,
     'தன்னொப்பாரில்லாதானை (6-46–2)
     "மற்றொறுந்தன்னொப்பாரில்லாதானை' (6–1–2)
     'தன்னொப்பில்லாத்  தில்லை நடம்பயிலுந் தலைவன் தன்னை’
     "ஒப்புடையனல்லன் ஒருவமனில்லி (6-97-10 (6-33-6)

என ஆளுடைய அரசரும் இத்திருக்குறட் பொருளை யெடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

‘பேரருட்கும் ஒப்பின்மையான் எனவே "அறவாழி யந்தணன் என்ற திருக்குறளில் அந்தணன் என்ற பெயராற் குறிக்கப்பட்ட பேரருளுடைமையும் புலப்படுத்தப்பட்டிருத்தல் அறிந்து மகிழத்தக்கதாம்.

இறைவன், படைத்தளித்தழிக்கும் மூவருள் ஒருவனாக இணைத்துப்பேசும் முறையுண்மையால், அவனை ஒப்பின்மையான் என முதன்மை கூறுதல் பொருந்துமோ என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயமறுப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

    4. ஆக்கி எவையும் அளித்தாசுடனடங்கப்
       போக்குமவன் போகாப் புகல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/35&oldid=513364" இலிருந்து மீள்விக்கப்பட்டது