பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅை திருவருணேக் கலம்பகம்

நல்ல மேனியும் - செவ்வையான வடிவமும், பொன் திரு வேடமே-இலக்குமியின் அழகிய வேடமே, காடி இட்டதும் - விரும்பி யணிந்து கொண்டதும், பொன் திருவேடமே-பொன் ஞற் செய்யப்பட்ட சிறப்புற்ற வாபரணமே, இல்லை ஆயினும் - இல்லையானலும், இ விடை ஐயமே - இந்த விடையானது சந்தே கமே, ஏற்க வந்ததும் - யாசிக்க வந்ததும், இ இடை - இவ்வி டத்தில், ஐயமே - பிச்சையேயாகும்.

பிச்சி - சாதிப்பூ வெனலுமாம். பொன் திருவேடம் என் பதற்குப் பொன்னலாகிய சீதேவி யென்னுந் தலைக்கோல மெனினும், பொன்ற்ை செய்த சிறப்புற்ற காதணியெனினும் பொருந்தும். இல்லையென்று துணிந்தாலும் மேலுள்ள உறுப் புக்க ளிருப்பதால் இந்த விடையானது சந்தேகமென்ருர். இடை யெனப் பிரித்து மருங்கு எனப் பொருள்கொள்ளலுமாம். அரு ணைக்குளே - ன் அசைநிலை; ஏனைய தேற்றம். ஏற்க - தெரிநிலை வினையெச்சம்; ஏல்-பகுதி, அ-வினையெச்ச விகுதி, கு-சாரியை, இதில் முதலடி நீங்க மற்றையடிகள் இடை மடக்காய் வுக் தன. முதலில் மாச்சீரும் மற்ற மூன்றுங் கூவிளச்சீர்களும் பெரும்பாலும் பெற்று நாற்சீரால் வந்தது அரையடியாகவும், அஃதிரட்டி கொண்டது ஒரடியாகவும், அவ்வடி நான்கு கொண்டு அரையடிக்கு நேரசை முதலாய் ஒற்ருெழித்துப் பதினேரெழுத்துப் பெற்று வந்த கட்டளைக் கலிப்பா. (சஎ)

கார் கண்டு பாகனேடு சொல்லல்

கட்டளைக்கலித்துறை - அயங்காட் டியமறை யார்விடை யாள ரருணைவெற்பிற் புயங்காட் டியமணித் தேர்வல வாமுன்பு போனகொண்டல்

சயங்க ாட்டிக் கோபமுஞ் சாபமுங் காட்டிக் கடித்திடித்துப் பயங்காட்டி லைஞ்சு மேதனி யேநின்ற பைங்கொடியே.ச.அ