பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் v55 GT“

பிறை - பிறப்பது என இளஞ் சந்திரனுக்குக் காரணக் குறி. முடிவு - முடிதல்; ஈண்டு அழிதலையுணர்க்கிற்று. முடி - முடியப்படுவது என்னுங் காரணம் பற்றி வந்த பெயர். கரு - மெப்பு, உலக முதலியன தோன்றுவவாதலின் இதற்கு உலகம் வண்கும். கற்பமாவது, சிருட்டிமுதற் பிரளய மிறுதியாகிய атеми,

(தானவரை * * * மழுங்காதே.)

தானவரை கடிந்தும் - அசுரர்களை அழித்தும், மலர் சது முகனை ஒழித்தும் -தாமரை மலரிலுள்ள நான்முகன் றலையைக் ள்ெளியும், மற்றை வானவரை அழித்தும் - மற்றைய தேவர் களைச் சங்கரித்தும், கின் கை - உன்னுடைய கையிலுள்ள, மழு படை வாய் மழுங்காது - மழுவாயுதத்தினது வாய் தேயாது.

மழு - எரி யிரும்புப் படை அக்கினிப் பிழம்பென்றுங் கூறுவர். ". தானவர், காசிபருக்கு த ந என்னும் மனைவியிடம், பிறந்தவர்; அது அம் மரபினருக்குப் பெயராயிற்று. ஏ.அசைநிலை.

(அண்டருக்கும் கடவாதே.)

அண்டருக்கும் - தேவர்களுக்கும், முனிவருக்கும் - தவஞ் செய்வோருக்கும், அழல் ஆன - அக்கினி போல் தகிக்கும்படி யான, கொடு விடத்தை - கொடிய நஞ்சை, கண்டமட்டும் நகர்த்திடவும் - பார்த்தவளவில் உண்ணவும், கண்டம் மட்டில் கடவாது - கண்டத்தின் அளவினின்றும் நீங்காது. ஏ அசைநிலை.

(மூவாமை : : * சான்றன்றே.)

நின்றன் - உன்னுடைய, மூவாமை தனக்கும் - மூப்பு.

அடையாமைக்கும், சாவாமை - இறவாமைக்கும், பிறவாமை

தமக்கும் - பிறவா கிருத்தற்கும், முதல் ஈடு ஈறு இலாத்மைக்"

2