பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அ. திருவருனேக் கலம்பகம்

மான் என்று கூறுவார், கலை என்பார் - கலைமான் என்று கூறுவார், கைமலை என்பார் - யானை என்று கூறுவார், வழி எது என்பார் - செல்லும் வழி யாது என்று கேட்பார், என் என்பாரிலை என் பார் - எதற்காக என்று கேட்பவர் இல்லை என்று கூறுவார், யான் - கான், எங் தம்-எங்கியுள்ள, மாதழை - மாவினது தழை, நன்று என்பார் - நல்லது என்று கூறுவார், குழலே - உனது கூந்தலை, கான் என்பார் - காடு என்று கூறு வார், கருதுங்கால் - ஆராயுமிடத்து, கருத்து என்னே - இவர்

எண்ணம் யாதோரி ==

இது தலைவியும் பாங்கியு முடனிருந்துழி, தலைவன் தழை கொண்டு வந்து நின்று, மான் முதலியன வந்தனவோ வென்று வினவிய தறிந்த தோழி, இத்தலைவர் பலவிதமாகக் கடறலால் இவரெண்ணம் யாதோவெனத் தலைவியை வினவியதாகக் கூறியதென்க. .

கலை - ஒருவகை மான். கைமலை - சையையுடைய மலை, எனவே, யானையை யுணர்த்திற்று. மலை - உவமையாகு பெயர். பருமை - வலிமை, அருவிகளால் உவமம். தழை - மலர்களை யி டையிட்டுத் தளிர்களாற் செய்த உடை விசேடம். இங்கனம் தொடுத்த தழையை ஆடையாக உடுத்திக்கொள்ளுதல் குறிஞ்சி நிலத்து மகளிரியல்பு. கானல் - சோலை, கான் எனக் கடைக் குறையாயிற்று என்று மாம். கான் - வாசனையுமாம். பதுமினி கூந்தலுக்கு இயற்கை மனம் உண்டென்ப. எவன்’ என்னும் வினவினைக் குறிப்புமுற்று இடைக்குறைந்து என்’ என்று ஆகி நீட்டல் விகாரத்தால் ஏன்? என நின்றது.

இைது, முதற்சீர் தேமாங்காய்ச் சீரும், இரண்டும் ஐந்தும் புளிமாச்சிரு ம் , மூன்றும் ஆறும் தே மாச்சீரும், நான்காஞ்சீர் பெரும்பாலும் புளிமாங்காய் ச்ருேம் பெற்றுவந்த அறுசீர்க்கழி. நெடிலாசிரிய விருத்தம் = (க.உ)