பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் டுள

அடியார்மேல் - தொண்டர்களிடத்து, முழுதும் - முழுமையும், கருனைகாட்டம் - கிருபா நோக்கம், புரியும் - செய்தருளுகின்ற, அருணாாட்டு - அருணைப்பதியை யுடைய நாட்டில், உறையும் - தங்கிய, இளம் தென்றல் பெற்றம் - இளந்தென்றற் காற்று, மறுகிடத்து - வீதியின்கண், இயங்கும் -சஞ்சரிக்கின்ற, காலம்காலமும்; பேதையேன் - பேதையாகிய யான், சிந்தை மறு கிட தியங்கும் காலம் - மனம்சுழலச் செய்வதின்னதென் றறியாது கலங்குகின்ற காலமுமாம், இது. o

இப்படிப்பட்ட மாலைக்காலத்தில் யான் எங்ங்னம் தலைவ னைப்பிரிந்து உயிர்வாழ்வது எனத் தலைவி வருக்கிக் கூறியவாறு. { மதன் போர்க்குரிய அம்புகளைச் சிதறுங்கால மென்ற தால் வசந்த காலம் என்பது குறிக்கப்பட்டது. மாலைக்காலத் தில் சந்திரன் பிரிக்க தலைவன் தலைவியை வருத்துங் காரணம் பற்றி வெங்கனல் போற்காய அம்பிறைக்குங் கால'மென்ருள். தலைவன் பிரிவாற்ருமல் உடல்மெலிந்து வளையல் கழன்ற கார ணத்தால், சங்கணியாக் கால'மென்ருள். தலைவன் வாராமை பற்றி ' என் நேசங் கணியாக் கால'மென்ருள். நினைத்த மாத் திரத்தில் வீடுபேறு தருங் தலமாதல்பற்றி, சடைமுடியா ாடியார்மேல் முழுதுங் கருணை நாட்டம் புரியு' மென்ருள். வசந்தகால மாதல்பற்றி தென்றல் மறுகிடத்து இயங்குங் கால'மென்ருள். இக்காரணங்கட்குரிய காலம், தனக்கும் சிந்தை கலங்கும்படி செய்தலால் பேதையேன் சிந்தை மறுகிட தியங்குங் காலம்’ என்ருள்.

மன்மதனுக்குரிய மலரம்புகளாவன : தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் ஆகிய இவற்றின் மலர்கள். வளைவல் சங் கிற்ை செய்யுங் காரணம்பற்றிச் சங்கென்ருர், துறை என்பதற்கு இடமென்றும், களவுத் துறையென்றும் பொருள் கூறுவாரு

முளர். மன்மத பாணம் எய்யும் முறையும் அதன் செய்கையும்: