பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 109.

இன்ன நன்மைகள் செய்தால் வீடு பேறு-மேல் உலகம் அடைவாய்' என்று அவா மூட்டினர். இவற்றிற்குச் சான் றோரும் நன்மக்களும் ஆட்படமாட்டார். கீழ்மக்களாம் கயவர்களே ஆட்படுவர்.

திருவள்ளுவர் இவ்வுண்மையை ஒரு குறள் மூலம் தோலுரித்துக் காட்டினார்.

'அச்சமே கீழ்களது ஆசாரம்: எச்சம்

அவாஉண்டேல் உண்டாம் சிறிது" (1075)

என்னும் குறளே அச்சத்தாலோ அவாவாலோ நல் லொழுங்கை மேற்கொள்பவர் கயவர்: என்றுகூறி காரணங் களை அறிய முயலாதபடி செய்யப்பட்டதை வெளிப் படுத்தினார். -

திருவள்ளுவர் காலச் சூழலில் மேலே முற்கால நூல் களில் காணப்பட்ட பகுத்தறிவை அணுகாத பழக்கங்கள் சூழ்ந்திருந்தன.

திருவள்ளுவர் இவற்றை எவ்வாறு நோட்டமிட்டார்?

மக்களுக்கு எவ்வாறு அவற்றின் விளைவுகள்ை ، ہوے gn முகம் செய்தார்?

அப்படியே அவற்றை ஏற்றுக் கொண்டாரா?

எடுத்து மொழிந்தாரா? . .

அவற்றை எவ்வகை அணுகுமுறையில் எடுத்து மொழித் தார்? - இவ்வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகள் திருவள்ளுவத் தின் மூடம் பற்றிய பகுத்தறிவு முனைகளைச் சுட்டிக் காட்டும், .