பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அத்தகைய 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' அது என்ன உப்பக்கம்: அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டெழுத்துக்கள் அ - தொலைவில் - சேய்மையில் உள்ளதைச் சுட்டும்; இ - அண்மையில் - அண்டையில் உள்ளதைச்சுட்டும்;

உ - இரண்டிற்கும் இடைப்பட்ட மையத்தைச்சுட்டும்:

இங்கு அப்பக்கமோ இப்பக்கமோ சுட்டப்படவில்லை. "உப்பக்கம்’ என்று சுட்டியமை சிறப்பாக ஆராயத் தக்க தாகும்.

உரையாசிரியர் அனைவரும் உப்பக்கம்’ என்பதற்குப் 'புறங்காண்பர், - முதுகு புறங்காண்பர், புறத்து இடுவர், விதி தன்மையும் புறத்திடுவர்' எனப் பொருள் எழுதினர். மேற்போக்காகக் காணும்போது இப்பொருள் பொருந்தும். ஆழ்ந்து நோக்கினால் ஆழமான கருத்து பொதிந் திருப்பதைக் காணலாம்.

இதனை ஒத்த, 'உப்பால்’ என்னும் சொல் பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளது. ஆனால் 'உப்பக்கம்’ என்பது திருவள்ளுவரின் ஆக்கச் சொல். அடுத்துத் தோன்றிய திருவள்ளுவமாலையில் 'உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்’ என்று இச்சொல். எடுத்தாளப்பட்டது.

“ஊழை ஒரு மாந்தனாகவோ ஒரு பொருளாகவோ உருவகமாகக் கொண்டால் அதன் உயிரோட்டமான மையத்தை உப்பக்கம் குறிக்கிறது. உப்பக்கத்தின் ஆழ்ந்தபொருளைக் கம்பர் காட்டிய அம்புகோண்டு காண்பது ஒரு வாய்ப்பாகும். அந்த அம்பும் (பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் எழுதிய புறங்காணல்"