பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 135

'உண்ணுதற்கு ஓர் உயிரைக் கொல்லாமை

ஆயிரம் வேள்வி செய்வதைவிடச் சிறந்தது'

என்னும் கருத்து வடவர் வேள்வியைச் சாடும் கருத்து, ஒர் உயிரைக் கொல்லாமை ஆயிரம் வேள்வியிலும் சிறந்தது. இஃது உயிர்மேல் அருள் என்பது மட்டும் அன்று: புலால் உண்ணாமையை வலியுறுத்துவது மட்டும் அன்று; தமிழ் மண்ணில் அறிவிற்குப் புறம்பாக நடந்த வேள்விகளைஆயிரக்கணக்கில் நடந்தாலும்-அவ்வேள்விகளை மறுக்கும் கருத்து.

வடவர் வேள்வியில் நான்மறை ஒதப் படும். தான்மறையாம் வேதம் என்பதன் பகுத்தறிவு பொருள் அறிவிற்கு எட்டாதது என்னும் முனை பொருள் கொண்டது. அறிவால் அதனை ஆராயாதே' என்று தடை.போடுவது. 17

திருவள்ளுவர் அதனையும் அது ஒதப் படும் வேள்வியையும் அறிவிற்கு ஆட்படுத்தி ஆராய்ந்து ஆயிரம் வேள்வியும் தாழ்ந்து போகும் என்று எழுதியது பகுத்தறிவு முனையாகக் கூர்ந்து நிற்கிறது. -

எழு பிறவி, இம்மை-மறுமை

எழு பிறவியைத் திருவள்ளுவர் ஏற்றே பாடியுள்ளார். இம்மை, மறுமையைச் சிலவகை முனைகளில் வலியுறுத்தி யும் உள்ளார். இவை பகுத்தறிவைப் புறந்தள்ளியவை. அதனால்தான் இப்பேச்சு இந்நூல் பகுத்தறிவு முனை என்றும் தலைப்பைப் பெற்றது. இன்றேல் திருவள்ளுவம் பகுத்தறிவு மனை' என்று முடிசூட்டப்பெற்றிருக்கும்.