பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஐயம் நீக்கும் பகுத்தறிவு

முனைகள்

இந்திரன்

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி” (25).

கெளதம முனிவர் மனைவி அகலிகையை இந்திரன் வஞ்சமாக புணர்ந்தான். அறிந்த கெளதமர் இந்திரனுக்கு உடம்பெல்லாம் கண்கள் பெண்குறிபோல் அமையுமாறு: சாபமிட்டார். எனவே, ஐந்தவித்த கெளதமன் ஆற்றலுக்கு உடம்பெல்லாம் பெண்குறிக் கண்களாகப் பதியப்பெற்ற இந்திரன் கண் காணும் சான்றாளான். இந்தக் கதையை குறிக்கிறது இக்குறள் 'அகல்விசும்புளார் கோமான் இந்திரன்' என்றதால் இது. வானத்துக் கோமான் இந்திரனையே குறிக்கும்; மற்றவரைக் குறிக்காது. எனவே, கெளதமர் கதையைத்தான் குறிக்கிறது. இது பகுத்தறிவை உடைக்கிறது. எனவே, திருவள்ளுவர்தம் பகுத்தறிவு முனை நோக்கில் ஐயத்தை உண்டாக்குவது இயல்பே. .

இந்திரன் பெண்குறிக் கண்கள் ஆயிரம் பெறும் சாபத்தை மட்டும் பெறவில்லை. அவன் ஆண்குறி அறுந்து போகும் சாபமும் பெற்றான். தவறுக்குரிய காரணக்