பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரைக்கு ஒரு சிற்றுரை

வணங்கி மகிழ்கின்றேன்.

இந்த வணக்க மகிழ்ச்சி பகுத்தறிவு முனையின் மலர்ச்சி.

'அறிய அறிய அறியாமை தீரும்’- என்றார் திருவள்ளுவர். அறியாமையை அறிய வைப்பது புத்தறிவு. அறியாமையை அகற்றுவது பகுத்தறிவு. பகுத்தறிவு கூர்மையான முனையை உடையது. இந்த முனை பகுத் தறிந்துதான் பாயும். இக்கூர்முனை திருவள்ளுவரால் எங்கெங்கே எவ்வெவ்வாறு பாய்ச்சப்பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதே, -

'திருவள்ளுவத்தில் பகுத்தறிவு மூனை’’

-என்னும் இந்நூல்.

இஃதொரு சொற்பொழிவின் எழுத்துருவம். இப் பொழிவு ஈரோடு திருக்குறள் பேரவையில் நிகழ்ந்தது. ஆம், ஈரோட்டில் நிகழ்ந்தது. -

பகுத்தறிவாளர் என்று அறிமுகமானோர் பலர் பகுத் தறிவு நடைமுறைகளுக்குத் தொய்வை ஏற்படுத்தி வரு கின்றனர். வேறுபாடும் மாறுபாடும் முரண்பாடுகளும் மலிந்து வருகின்றன, தன்னலத்திற்குள் பகுத்தறிவை