பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 1492

6. கையேந்தி இரப்போரைக் கண்டு கவன்ற மனக் முகுறலால் உலகை இயற்றிய'வனாம் நான் முகக் கடவுளைப் பரந்து கெடுக” என்ற பகுத்தறிவு மிடுக்கு.

7. உயிரையும் உடலையும் கூறுபடுத்தும் கூற்று வனாம் காலன், நோன்பு வலிமையுடையவர்க்கு எதிர் நிற்க ஆற்றாமல் தோற்றோடச் செய்த வெற்றிப் பதாகை.

8. 'உலகத்தார் உண்டு’ என்றமை கடவுளைக் குறிக்காது; இவ்வகையில் பகுத்தறிவாளர்க்குத் துணையாக வழங்கிய கேடயம், -

9. மாந்தனே தெய்வம்' என்ற வாழ்வியல் நிறைவு.

நோக்கு.

10. வடவரின் தான்மறைகளும் மனுநூலும் விதித்த சாதி வேற்றுமைகளைச் சாடி விலக்கிய உறுதிப் பாடு.

11. நான்மறையை ஒதலைவிட நல்லொழுக்கம் குன்றுவது கேடு தரும்' என்ற நல்லாக்கம்.

12. பார்ப்பனர் 'அந்தனர்” ஆகார் என்ற கருத் தேற்றமும் “அந்தணர் நூல்' நான்மறை ஆகாது என்ற பொருள் தோற்றமும்.