பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 15

திருவள்ளுவர் காலச்சூழல்

திருவள்ளுவர் காலம் எவ்வுணர்விலும் எவ்வறிவிலும் எந்த நிலையில் இருந்தது? அவர்களுக்கு முன்னரும், ஒட்டி யும், ஒரளவில் பின்னரும் எழுந்த நூல்களும் பாடல்களும் மாந்தர் உணர்வின் வழிப்படுவதையும் அறிவின் வழிப்படு வதையும் ஏறத்தாழத்தான் கொண்டு செலுத்தின. ஒத்த நிலையில் கொண்டு செலுத்தவில்லை.

சங்க இலக்கியங்கள் என வகுக்கப் பெற்றுள்ள பத்துப் பாட்டும், அதனுடன் எட்டுத் தொகையும், தொடர்ந்து எழுந்த பதினெண்கீழ்க் கணக்கும், மேலும் கூட்டினால் இரட்டைக் காப்பியங்களும் உணர்வுகளுக்கு மாந்தரை ஆட் படுத்தியதைவிட அறிவிற்கு ஆட்படுத்தியமை குறைவு எனலாம், - -

வடமொழி நான்மறைகளும், அவற்றின் வழி உபநிட தங்களும், மநுநூலும் ஆராயக் கூடாதவை. அவை விதிப் பனவற்றைக் கண்மூடி வணங்கிப் பின்பற்ற வேண்டும்’ என்னும் கருத்து சங்க காலந்தொடங்கி மாந்தரிடை உலவ விடப்பட்டது. திருவள்ளுவப் பெருந்தகை அக்கருத்தைக் கெல்லித் தள்ளியவராக,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” (423) என்றும், -

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” (355)

என்றும் சொல்வோரையும் சொல்லப்படுவனவற்றின் தகுதியையும் பார்த்தல் கூடாது; மெய்ப்பொருள் காண்பது தான் முறை. அதனை அறிவுதான் செய்ய வேண்டும்; அது தான் அறிவு' என்று எழுதிய முதல்வர் திருவள்ளுவர்.