பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 27

ஒன்றோடொன்று உராய்வதால் ஒலியும் உராயும் பொரு ளில் சிதைவும் நேரும். வானவெளியில் பெருங்கோள்கள் உராய்ந்ததால் சிதறிய ஒன்றே சூரியன். கோளத்தோடு கோளம் உராய்ந்து - தேய்ந்து சிதறிச் சுழலும் சூரியன் தெய்வு எனப்பெறும். பகவு+அன்= பகவன் ஆனமை போன்று தெய்வு+அம்= 'தெய்வம்’ என்று பெயர் பெற்றது. இதன்படி முதல் தெய்வமாகச் சூரியன் அமைந்தது.

தேய்தல், உராய்தல் என்பதையும் அஃது உராய்வால் ஏற்பட்ட சூரியனைக் குறிப்பதையும் மொழியறிஞர் கா. சு. பிள்ளையவர்களும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களும் ஒருமுகமாகக் கண்டனர்.

இவ்வாறு தெய்வம் இயற்கை நிகழ்ச்சியால் தோன்றிப் பெருவலிமையும், திறனும் கொண்டதாக வானத்திலுள்ள கதிரவனைக் குறித்தது; குறிக்கிறது. இதன் தொடர்பில் மண்ணில் தோன்றிய மாந்தரும் வாழ்வில் அரியன செய்து, நெறியன படைத்து உரிய பெரும்புகழ் பெற்றவர் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவராவர். அவர் உயிர் துறந்ததன் பின் உயிர் மட்டும் ஆவியாக வானத்தில் உறையும். அவ்வாவி என்னும் வாழ்வாங்கு வாழ்ந்தவன், வானத்தில் கதிரவ னுடன் எண்ணத் தக்க தெய்வம் ஆவார் என்பதனைத் திருவள்ளுவர்,

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்' (50) என்றார். இதனை இல்வாழ்க்கையின் இறுதியான நிறைவு நிலையில் வைத்ததும் எண்ணத்தக்கது. அதிலும் இம்மண்ணுலகில் வாழ்ந்த நிறைவைக் குறித்தார். அதிலும் குறிப்பாக வாழ்பவன்' என்றார். வாழ்ந்தவன்" மட்டுமன்று, வாழ்கின்றவன் அன்று வாழ்பவன்-எதிர் காலத்திலும் நிலைத்து வாழ்பவன்' என்றார். அவனது செயற்கரிய திறமான வாழ்வால் என்றும் வாழ்பவனாக