பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கடவுளும் திருவள்ளுவரும்

திருவள்ளுவர் தாம் எழுதிய 1330 குறட்பாக்களையும் 133 அதிகாரங்களாக அடைத்துள்ளமை அறிந்த ஒன்று. ஒரு கருத்தின் விளக்கத் தொகுப்பாம் 10 குறட்பாக்களே ஒர் அதிகாரம். எடுத்த ஒரு கருத்திற்கேற்ப ஒவ்வோர் அதிகாரத்திற்கும் அவரே தலைப்பை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைக்காது விட்டால் 1330 குறட் பாக்களும் மோத்தையாக, கருத்துப் பகுப்பை அறிய முடியாமல் படிப்போரைக் குழப்பிவிடும். எனவே, அதிகாரப் பெயர்களும் அவரால் அமைக்கப்பட்டனவே,

அவை, அவர் அமைத்தபடியே-அவர் கொடுத்த தலைப்புச் சொற்களிலேயே இன்றும் உள்ளனவா? இல்லை. லே மாற்றங்கள் சிலரால் செய்யப்பட்டுள்ளன.

சான்றாக ஒன்று : பரிமேலழகரும் மற்ற சிலரும் குழந்தைப் பேற்றை,

விளக்கும் அதிகாரத்திற்குப் புதல்வரைப் பெறுதல்' என்று காட்டினர்.

திருவள்ளுவர் அதிகாரக் கருத்துள்ள குறட்பாவை முடிக்கும்போது அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாயை