பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 3}

என இரண்டு இடங்களில் இறைவன்' என்லும் சொல் திருவள்ளுவரால் ஆளப்பட்டது.

எனவே, இறைவன்' என்னும் சொல்லுடன் வணக்கத்திற் குரிய சொல் சேர்ந்த தொடராக அதிகாரப் பெயர் திரு வள்ளுவரால் அமைக்கப்பெற்றிருக்கும்.

இம்முதல் அதிகாரத்தில் வணக்கத்திற்குரிய சொற் களாக, தொழல் (2) வணங்கல் (9) என்னும் இரு சொர் கள் உள்ளன. இவற்றில் ஒன்று கொண்டு

‘இறைவனைத் தொழல்’

இறைவனை வணங்கல்

அல்லது

இறை வணக்கம் எனும் மூன்றில் ஒரு தொடர் அமைக்கப்பட்டிருக்கலாம்.

'இறைவன்’ என்றமைப்பதில் ஒரு கருத்து மாற்றம் கண்டி எவரோ ஒர் உரையாசிரியர் கடவுள் வாழ்த்து’’ என்று அமைத்தார். ஏன் 'கடவுள் வாழ்த்து” என்னும் தொடரைத் தேர்ந்தார்?

"கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்று தொல்காப்பியத்திலும், -

“மீமிசைக் கடவுள் வாழ்த்தி' என்று குறிஞ்சிப்பாட்டிலும் பிறஇலக்கியங்களிலும் 'கடவுள் வாழ்த்து' என்னும் தொடர் உள்ளது.

1. தொல்காப்பியர் : தொல் : பொருள் : 85 - 2. கபிலர் : குறி : 209 .