பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

உவமை என்றால்

'கள்' இங்கெல்லாம் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. உவமை என்று கூறப்படுவது ஏன்? தெரியாத ஒரு பொருளைக் கூறுவதே உவமை. உவமையாகக் கூறப்படும் பொருள் உயர்ந்த தகுதியுடையதாக இருக்க வேண்டும். என்பது இலக்கணம்.

“உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை ' என்று தொல்காப்பியர் விதித்தார். அவ்வாறானால் திருவள்ளுவர் உவமைக்கு எடுத்துக் கொண்ட கட்குடியை - கள்ளை உயர்வாகக் கருதினாரா? இல்லை.

உவமை சிறப்பு, நலம், காதல், வலிமை என்னும் நான்கின் அடித்தளத்தில் வரும் என்ற தொல்காப்பியர்,

'கிழக்கிடுபொருளோ டைந்து மாகும்’’’ என்று தாழ்ந்த - கிழக்கிடு - கீழான பொருளும் உவமையாக வரலாம் என்றார். இதன்படி தாழ்ந்த பொருளாகத்தான் 'கள்' உவமையாயிற்று. மற்றுமோர் அமைதி கூறலாமா?

மேலே காணப்பட்ட கள் உவமையான குறட்பாக்களை *திருவள்ளுவர் தாம் நேர் கூற்றாக வைத்துக் கூறவில்லை. காதலன், காதலி, தோழி ஆகியோர் வாய்ப்பேச்சாகத்தான் கட்குடியை உவமையாக்கினார். எனவே, குறை திருவள்ளு. வரைச் சாராது’ என்று அமைதி கொள்ள நினைக்ககலாம். இஃதும் பொருந்தாது.

காதலன், காதலி, தோழி எனும் படைப்பு மேம்பட்ட இல்லற உள்ளிட்டின் மணியான படைப்பு. எனவே, அன்னோரும் கள்ளை நினைக்கக் கூடாதவர்களே; உவமை யாகவும் நினைக்கச் கூடாதவர்களே.

த்ொல். பொருள் : 274 2. தொல்காப்பியர் : தொல். பொருள் : 275