பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கடவுட் கொள்கை

இறைவன்

'இறை என்னும் சொல் பல பொருள்களைக் குறிக்கும். அது அன் விகுதி பெற்று ‘இறைவன் ஆயிற்று. இறை: என்பதன் இரண்டு. பொருள்களை அடித்தளமாகக்கொண்டு இறைவன் உருவாயிற்று. ஒன்று, தங்கும் இடம் என்னும் பொருள். இரண்டு, மக்கள் மன்னனுக்குச் செலுத்தும் கடமைப் பொருள்(வரி). தங்கும் இடம் என்னும் பொருளில் இறைவன்’ என்பது, 'பார்க்கும் இடமெல்லாம் நீக்கமறத் தங்கியுள்ள கடவுள் எனப்படும் இறைவனைக் குறிக்கும். தங்கும் இடம்' என்னும் அதே பொருளில் தன் ஆட்சிக்குரிய பரப்பிடமெல்லாம் ஆளுகை உரிமையில் தங்கிக் யுள்ள மன்னன் எனப்படும் இறைவனையும் குறிக்கும், கடமைப் பொருள் என்னும் பொருளில் அப்பொருளைப் (இறையை) பெறுபவனாகிய மன்னனைக் குறிக்கும்.

இறை - கடவுள் - மன்னன்

இறை என்னும் சொல்லே ஆகுபெயராகக் கடவுள் எனப்படும் இறைவனையும் நாட்டை ஆளும் இறைவனாம் மன்னனையும் குறிக்கும்.