பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இறைமாட்சி அதிகாரத்தில் கடவுட் குறிப்பில் இறை. ஓரிடத்திலும் ஆளப்பட்டுள்ளன. -

அஃதாவது திருவள்ளுவருக்கு முன்னைய நூல்களும், அவர் கால நூல்களும், அவர் காலத்தை ஒட்டிய நூல்களும் கடவுள் என்னும் பொருளில் இறை-இறைவனை ஒன்றிரண்டு இடங்களில் ஆண்டிருக்க திருவள்ளுவர் மட்டும் ஏன் இரு சொற்களையும் கடவுளுக்குக் கையாண் டார். அத்துடன் 36 நூல்களிலும் 'கடவுள்' என்னும் சொல் 90 இடங்களில் (முன் பக்கம் 31இல் காட்டியபடி) கடவுள் பொருளில் கையாளப்பட்டிருக்க மிக அறிமுகமாகி வழக்கி விருந்த அச்சொல்லை விட்டு அருகிய வழக்கமான இறைவனைத் தேர்ந்தது ஏன்? அதிலும் மன்னன் பொருளில் அதிக வழக்கிலிருந்த சொற்களாம் இறைவன், இறையைத் தேர்ந்தது ஏன்? . . . . . -

இத்தேர்வில்தான் திருவள்ளுவரின் பகுத் •

தறிவு அணுகுமுறை வெளிப்படுகிறது. பகுத்தறிவு உருவமுள்ளதாக வழங்கப்பட்ட ‘கடவுள்' முனை என்னும் சொல்லைக் கையாளவோ மாந் தர்க்கு நினைவூட்டவோ அவர் விரும்ப 1 வில்லை. அதே நேரத்தில் பொதுவான சொல் ஒன்றை-அதிலும் தம் உருவற்ற குறியீடாகக் கொள்ளும் சொல்லை-அஃதாவது (இறை) இறைவன் என்பதைத் தேர்ந்தார்.

பொதுக் குறியீடாக இறைவன் 峰 என்னும் சொல்லைக் கையாண்டார். பகுத்தறிவு. ஆனால், அவ்வாறான மூல முதல்வனுக்கு முனை - ஒரு பெயரைப் படைக்க எண்ணியிருக்க - வேண்டும். அதற்கு உரிய சொல்லாக்க 2 மாகப் பகவன்’ என்னும் சொல்லைப் படைத்தார். - ...