பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயல் 27 கள், இதிகாச நூல்கள் அனைத்தையும் மிகக் கவனத்துடன் கற்று, ஆராய்ந்து, அவைகளிலிருந்து தெளிந்த உண்மை களே - இந்தியாவின் கினைப்பும்; அதன் வளர்ச்சியும் (“The Indian Thought and its Development”) என்னும் நூலில் ஆங்கில மொழியில் 1935 - ல் வெளி யிட்டிருக்கிருர். அவர் அவைகளை வெளியிடும் முறை ஒவ்வொரு நூலாகப் பாகு படுத்திக்கொண்டு, அதில் கண்ட கருத்துக் களை ஆதாரங்களுடன் விளக்கிச் செல்லும் சீரிய நெறியாகும். அவ்வாறு முறைப்படுத்திச் செல்லுகையில் திருக் குறளைப்பற்றி விளக்குமிடத்து, ஒவ்வொரு கருத்தையும் பல குறள்களை ஒப்புநோக்கி, ஆதாரங் காட்டி மிக விரிவாக எழுதியிருக்கிருர். அவர் குறட் கருத்தைச் சிறப்பித்துக்கூறும் பகுதிகளை எல்லாம் அதிலுள்ளவாறே எடுத்துக் கூறுவதானல், அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அவற்றின் திரண்ட பொருளைமட்டும் இங்கு எடுத்துக் கூறுதல் சாலும். - ஆசிரியர்.) 품 事 軒 திருவள்ளுவர் உலகத்தில் தோன்றிய மேதைகளில் மேதையாவார். மக்கள் வாழ்க்கையில் தொடர்புள்ள பல துறைக் கலைகளையும் உணர்ந்திருக்கிருர். மொழியறிவிலும் திறமையுடையவர் என்பது அவர் கையாண்டிருக்கும் சொற்கள், சொற்குறியீடுகள் முதலியவற்றன் நன்கு புலகிைன்றது. வள்ளுவர், அவர் தோன்றிய நாட்டில் வேரூன்றி யிருக்கும் குலப்பாகுபாடுகளில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த