பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவள்ளுவர் அகில உலகப் பொது அரசாங்கம் ஏற்படுவதைப்பற்றி அத்தகைய மகாநாடுகளில் இக்குழு எடுத்துக் கூறும். 4. சமூக ப் பி ண க்கு நீ க் கும் குழு :- தமிழ் நாட்டிலிருக்கும் சாதிப் பிரிவுகளால் சில வகுப்பினருக்கு இருக்கும் இன்னல்களை ஒற்றர் குழுவினரால் நன்கு அறிந்து அவற்றை நீக்கிட இக்குழு பாடுபடும். இதேபோல் வேறு நாடுகளில் கிற பேதத்தால் துன்புறும் வகுப்பினருக்கும் உதவி செய்ய முயலும். 'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். - தி. கு. 972. என்கின்ற மறைமொழி செயற்பட இக்குழு பெரு முயற்சி எடுக்கும். 5. இ ர ப் போர் க் கு இ ரங் குங் கு ழு :- தமிழ் நாட்டில் இரந்து வாழ்கின்ற மக்தள் பலர் இருக்கின்றனர். ஒற்றர் குழு அவர்களைப்பற்றிச் சரியான விவரமறிந்து, வேலை செய்யக் கூடிய உடல்வலிவு உள்ளோரை வேறயும், அவ்வாறு இல்லா தோரை வேருயுங் குறித்துத் தலைமை ஆசுேக்குத் தெரிவிக்கும். உடல்வலிவு உள்ளோரைப்பற்றி வேலையமர்த்துங் குழுவிற்கும், அவ்வாறில்லாதோரைப் பற்றி இரப்போர்க்கு இரங்குங் குழுவிற் கும் அறிவிக்கும். 'இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்.' - தி. கு. 1 06 2. என்னுங் குறள்நெறியைக் கடைப்பிடித்து, இக்குழுவினர் முறை செய்வர். பிச்சை யெடுத்துப் பிழைக்கின்ற மக்கள் உள்ள அரசாங் கம் இதைக் கவனிக்க வேண்டும். இரப்போர்க்கு இரங்குங் குழு அரசாங்க உதவியை நாடி அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு குறிப் பிட்ட இடத்தில் வைத்து உணவளிக்கத் திட்டஞ் செய்ய வேண்டும்.