பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவள்ளுவர் அறிவாலய நிதியும் ஆலயப் பக்தர்கள் கடமையும் நம் காட்டுச் சமய ஆலயங்களைப் பற்றி சாமி சகஜானந்தம் அவர்கள் - ஆலய விதிகளைப் பற்றிய பூர்வீக நூல்களிலிருந்து ஆதாரங்காட்டி, ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். வீட்டில் ஒவ்வொருவரும் தனியாக ஒரு அறையை ஒதுக்கி கடவுள் வழிபாட்டுக்கு அதைப் பயன்படுத்தவேண்டுமாம். அவ்வித வசதியும், அவகாசமும் இல்லாதவர்கள் தான் ஆலயத் தில் போய் வழிபட வேண்டுமாம். வி ட் டி ல் சாப்பிட வ ச தி யில்லாதவர்களுக்கு. அன்ன சத்திரத்தில் சாப்பாடு போடுவது போல, வீட்டில் கடவுள் வழிபாடு செய்துகொள்ள வசதியில்லாத வர்களுக்காகவே ஆலயம் கட்டப்பட்டதாம். அதற்கு நேர்மாருக பிற்காலத்தில் ஏழைகளுக்கு ஆலயத்தில் இடமில்லாமற்போனதாக சரித்திரத்தில் அறிந்தோம். இப்போது மகாத்மா காந்தியின் முயற்சியால் எல்லோரும் போய் வழிபடச் சட்டம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போதிருக்கும் ஆலயங்கள் மக்களிடம் ஒற்றுமையை வ ள ர் க் கவு ம், சாதிபேதங்களைக் குறைக்கவும், ம. க் களி டம் இருக்கும் குறைபாடுகளைத் தீர்க்கவும் பயன்படவில்லை என்று பல அறிஞர்கள் கூறுகின்ருர்கள். இக்குறைபாடு இந்து சமய ஆலயங்களைப் பற்றி மட்டுமல்ல, கிறிஸ்து சமய ஆலயங்கள், இஸ்லாமிய ஆலயங்கள் அனைத்தையும் ப ற் றி ச் சொல் லப் படுகிறது. கடவுள் பேராலும், சமயங்கள் பேராலும் சுயநலமிகளின் சூழ்ச்சிகள் மிகுதிப்பட்டிருக்கின்றனவென்றும், அதனுல்தான் நன்மைக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அவைகள், அது செய்ய மூடியாமற் போனதுமல்லாமல் அதற்கு மாறனவைகளைச் செய்யும்