பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

இ-ள்:- கற்றதனால் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தினானாகிய சொற்களையெல்லாம்) கற்றதனானாகிய பயன் (வேறு)யாது, வால் அறிவன் நற் றாள் தொழார் எனின் - விளங்கின அறிவினையுடையவன் திருவடியைத் தொழாராயின்? [கொல்- அசை.]

சொல்லினானே பொருள் அறியப்படுமாதலான், அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடு பெறலாகும். "கற்பக் கழிமட மஃகும்" என்றாரு முளர்.

மீண்டும் வணக்கம் கூறிய தெற்றுக் கென்றார்க்கு, கற்றதனால் பயன் இது வென்பதூஉம், வேறு வேறு பயன் இல்லை யென்பதூஉம் கூறிற்று.

லர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.

இ-ள்:- மலர் மிசை ஏகினான் மாண் அடி சோந்தார் - மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வடியைக் சோந்தவரன்றே, நிலம்மிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். [சோந்தவரன்றே-சோந்தவரே, அன்று - அசை.]

நிலமென்று பொதுப்படக் கூறியவதனான், இவ்வுலகின்கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும்.

'தொழுதாற் பயன் என்னை' என்றாக்குப் போகம் நுகர்தலும், வீடு பெறுதலும் என்று கூறுவார், முற்படப் போகம் நுகர்வா ரென்று கூறினர்.

னக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
மனக்கவலை மாற்றல் அரிது,

இ ள்:- தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), மனக்கவலை மாற்றல் அரிது-மனத்து உண்டாம் கவலையை மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.]