பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வாழ்த்து

வீடுபெறலாவது, அவலக் கவலைக் கையாற்றின் நீங்கிப் புண்ணிய பாவ மென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறத்தலு மில்லாததொரு தன்மையை யெய்துதல், [அவலம் - கிலேசம். கையாறு - துன்பம்].

வீடு பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார், அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலில்,

றவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
பிறவாழி நீந்தல் அரிது,

இ-ள்:- அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறமாகிய கடலை யுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), பிற ஆழி நீந்தல் அரிது - பிற ஆழியை நீந்தல் ஆகாது. [பிற ஆழி - காமமும் பொருளும்.]

அவலம் நீங்கப்பெறுதல் அரிது என்றவாறு.

இது காமமும் பொருளும் பற்றிவரும் அவலம் கெடு மென்றது.

வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடிசேர்ந்தார்
யாண்டும் இடும்பை யிலர்,

இ-ள்:- வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி - இன்பமும் வெகுளியும் இல்லாதானது திருவடியை, சேர்ந்தார் - சேர்ந்தவர், யாண்டும் இடும்பை இலர் - எவ்விடத்தும் துன்பம் இல்லா தவர்.

காமமும் கோபமும் ஆகா என்றற்கு "வேண்டுதல் வேண்டாமை யில்லான்” என்று பெயரிட்டார். (இன்பமும் வெகுளியும் - காமமும் கோபமும்].

இது, கையாறு கெடு மென்றது.

ருள்சேர் இருவினையுஞ் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு,