பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடாவொழுக்கம்

[தவத்திலே-தவவேடத்திலே. தவமல்லாதவற்றை-காமச்செயல்களை. தூறு -புதர். சிமிழ்த்தால் என்பது ஆல் கெட்டு நின்றது.]

(அர்ச்சுனன் சுபத்திரையைக் கவர்தற்காகத் தவவேடம் கொண்டது. போலப்) பெண்களைக் கவர்தற்காகத் தவவேடம் கொள்வோரும் உண்டென்றது இது. ௨௮௪.

வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றம் படின்?

இ-ள் :- வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-வான் அளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும், அஃது யாதினைச் செய்யவற்று, தன் நெஞ்சம் அறிய குற்றம் படின்-தன் நெஞ்சு அறியக் குற்றம் உண்டாயின்?

தான் என்பது அசை. [அறிய என்பது ஈறு கெட்டு நின்றது. வான் அளவும் உயர்ந்த பெருமை யுண்டாயினும்-(தவத்தினால்) மிக வுயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும், நெஞ்சு-மனச்சாட்சி.]

இது, கூடாவொழுக்கத்தினைப் பிறர் அறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினால் பயன் உண்டாகா தென்றது. ௨௮௫.

ஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

இ-ள் :- வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம்-கள்ள மனத்தினனது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தை, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்- (பிறர் அறியாராயினும், தன் உடம்பிலுண்டான) பூதங்கள் ஐந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.

பூதங்கள் என்றது, அவையிற்றின் காரியமாகிய பொறிகளை. [குற்றத்தினையுடைய ஒழுக்கம்-தீய ஒழுக்கம்.]

௧0௩