பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இது, பிறர் அறியாரென்று கருதித் தீயன செய்யலாகா தென்றது. ௨௮௬.

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

இ-ள்:- நெஞ்சில் துறவார்-நெஞ்சில் துறவாராய், துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின்-துறந்தார்போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போல, வன்கணார் இல்-கொடியார் இல்லை (உலகத்து).

இஃது, அகத்தில் பற்றினை வைத்துக் கொண்டு புறத்தில் துறவு வேடத்தைப் பூணுமவர் மிகக் கொடிய ரென்றது. ௨௮௭.

ற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவும் தரும்,

இ-ள்:- பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம்-பற்றினை அற்றேம் என்பாரது குற்றத்தினையுடைய ஒழுக்கம், எற்று எற்று என்று பல ஏதமும் தரும்-(எல்லாராலும்) எற்று எற்று என்று சொல்லும்படியாகப் பல குற்றமும் உண்டாக்கும்.

எற்று என்பது திசைச்சொல். [எற்றல் - கொல்லல், வெட்டல்.]

இது, தவவேடத்தினரது தீய ஒழுக்கம் அவருக்கு இம்மையிலும் தீமை பயக்கு மென்றது. ௨௮௮.

ழித்தலும் நீட்டலும் வேண்டாம், உலகம்
பழித்த தொழித்து விடின்.

இ-ள்:- மழித்தலும் நீட்டலும் வேண்டா-மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின்-உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமும் கடிந்து விடுவாராயின்.

௧0௪