பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

ரோடு வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்- (புறஞ் சொல்லாதிருந்து நல்குரவினால்) சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்கமெல்லாம் தரும்.

இது, புறங்கூறாமை ஆக்கமெல்லாம் தரு மென்றது. ௩௧௨.

றங்கூறான் அல்ல செயினும், ஒருவன்
பறங்கூறான் என்றல் இனிது.

இ-ள்:- ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தை வாயால் சொல்லுதலும் செய்யானாய்ப் பாவங்களைச் செய்யினும், பறங்கூறான் என்றல் இனிது-பிறரைப் புறஞ்சொல்லான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்றாம்.

இது, பாவம் செய்யினும் புறங்கூறாமை நன்மை பயக்கு மென்றது. ௩௧௩.

றஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

இ-ள்:- அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை-அறத்தை நினைக்கின்ற மனமுடையன் அல்லாமை, புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும்- (பிறரைப்) புறஞ்சொல்லும் புல்லியகுணம் ஏதுவாக அறியப்படும்.

[நெஞ்சால் சொல்லலானது, நினைத்தல்.]

இது, புறஞ்சொல்லுவார் மனம் அறத்தை அறியா தென்றது. ௩௧௪.

றனழீஇ அல்லவை செய்தலின் தீதே,
புறனழீஇப் பொய்த்து நகை.

இ-ள்:- அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறத்தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்தலினும் தீது, புறன் அழீஇ

௧௧௪