பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

இ-ள்:- பிறன் பழி கூறுவான்-பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தனக்குண்டான பழிகளிலும் சிலவற்றை வேறுபடத் தெரிந்து (பிறரால்) சொல்லப்படுவான்.

இது, புறங்கூறுவானைப் பிறரும் புறங்கூறுவரென்றது. ௩௧௯.

திலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்,பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

இ-ள்:- ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்-பிறர் குற்றம் போலத் தமது குற்றத்தையும் காண வல்லராயின், மன்னும் உயிர்க்கு பின் தீது உண்டோ-(தமது) நிலைபெற்ற உயிர்க்குப் பின்வரும் தீமை உண்டோ? (இல்லை.)

இது, புறஞ்சொல்லாமைக்குக் காரணம் கூறிற்று. ௩௨0.

௩௩-வது.-பயனில சொல்லாமை.

பயனில சொல்லாமையாவது, கேட்டார்க்கும் தனக்கும் நற்பயன் படாத சொற்களைக் கூறாமை. [வாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை "வாய்மை"யாலும், கடுஞ்சொல்லை "இனியவை கூற"லாலும், குறளையைப் "புறங்கூறாமை"யாலும், விலக்கிப் பயனில் சொல்லை இவ்வதிகாரத்தால் விலக்குகின்றார்.]

சொல்லுக சொல்லின் பயனுடைய; சொல்லற்க.
சொல்லில் பயனிலாச் சொல்.

இ-ள்:- சொல்லின் பயனுடைய சொல்லுக-(ஒருவன்) சொல்லுவனாயின் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்

௧௧௬