பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இது, பற்றினை விடவிடத் துன்பம் குறையு மென்றது. ௩௪௫.

ற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.

இ-ள்:- பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்-(ஒருவன் எல்லாப் பொருள்களோடும்) பற்று அற்ற பொழுதே (அது) பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்-அதனை விடாத பொழுது நிலையாமை காணப்படும்.

[நிலையாமை-நிலையாமையையுடைய யாக்கை. காணப்படும்-உண்டாகும்.]

இஃது, எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது. ௩௪௬.

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டியற் பால பல.

இ-ள்:- உண்டாக வேண்டின் துறக்க-(தன் உயிர்க்கு ஆக்கம்) உண்டாக வேண்டின் (தன் உடைமை யெல்லாவற்றையும்) துறக்க; துறந்த பின் ஈண்டு இயல் பல பால-துறந்த பின் இவ்விடத்தே இயலும் பகுதிகள் பல.

இது, துறவினது இம்மைப் பயன் கூறிற்று. ௩௪௭.

லைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

இ-ள்:- தீர துறந்தார் தலைப்பட்டார்-பற்றறத் துறந்தவர் முத்தியைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்-அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே அகப்பட்டார்.

[தலைப்படுதல்-பொருந்துதல்-அடைதல். வலை போலத் துன்பத்தைத் தருதலின், பிறப்பினை வலையென்று கூறினார்.]

௧௨௬