பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இது, (பொருள் மேல் ஆசையில்லாதார் பொய் கூறாராதலின்,) மெய் சொல்ல அவாவின்மை வருமென்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. ௩௬௫.

வாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

இ-ள்:- அவாவினை ஆற்ற அறுப்பின்-ஆசையை மிகவும் போக்குவானாயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும்-கெடாத வினை தான் விரும்பும் நெறியாலே வரும்.

[ஆற்ற-மிகவும்-முற்றிலும்.கெடாத வினையாவது அறம்.]

இஃது அவாவின்மையால் அறம் கைகூடு மென்றது. ௩௬௬.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
யாண்டும் அதுவொப்ப தில்.

இ-ள்:- வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை-அவாவின்மை போன்ற மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை; ஆண்டும் அது ஒப்பது இல்-அவ்விடத்திலும் அதனை ஒப்பது பிறிதில்லை.

[மிக்க செல்வம்-உயர்ந்த செல்வம். இவ்விடம்-இல்வுலகம். அவ்விடம்- சுவர்க்க லோகம்.]

இஃது, அவாவின்மையின் மிக்கதோர் பொருள் இல்லை யென்றது. ௩௬௭.

ன்பம் இடையறா தீண்டும்; அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

இ-ள்:- அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்-அவா

௧௩௪