இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவாவறுத்தல்
வாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின், இன்பம் இடையறாது ஈண்டும்-இன்பமானது இடையறாமல் (வந்து) மிகும்.
இஃது, அவாவின்மையால் இன்பமும் வரு மென்றது. ௩௬௮.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
இ-ள்:- வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்-(ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும் -பிறவாமை (பொருளை) விரும்பாமையை விரும்பத் தானே வரும்.
இஃது, அவாவின்மையால் பிறவாமையும் வருமென்றது. ௩௬௯.
ஆரா இயற்கை அவாநீப்பின்; அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
இ-ள்:- ஆரா இயற்கை அவா நீப்பின்-நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவனாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும்-(அது) விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்.
இயல்பாவது, என்றும் ஒருபடிப்பட்டது.
இது, அவாவின்மையால் உயிர் தனது மெய்யுருவைப் பெறு மென்றது. ௩௭0.

௧௩௫