பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழியல்

இ-ள்:- துப்புரவு இல்லார் துறப்பார்-நுகரும் பொருள் இல்லாதார் துறக்க அமைவர், உறல் பால ஊட்டாது கழியும் எனின்-தமக்கு வந்துறும் துன்பப் பகுதியானவை உறாது போமாயின்.

[மன் என்பது அசை. ஊட்டாது என்பது ஈறு கெட்டு நின்றது. துன்பப் பகுதியானவை-துன்பத்தைக் கொடுக்கும் ஊழைச் சேர்ந்தவை.]

இது, துறவறம் ஊழினால் வரு மென்றது. ௩௭௯.

ன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன்?

இ-ள்:- நன்று ஆம் கால் நல்லவாக காண்பவர்-நன்மை வரும் காலத்து நன்றாகக் கண்டவர்கள், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-தீமை வரும் காலத்து அல்லல் படுவது யாதினுக்கு?

அறிந்தவர்கள் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ள வேண்டுமென்று இது கூறிற்று. ௩௮0.

 

.

அறத்துப்பால் முடிந்தது

௧௪0