பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

டாக பெறின் - கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறில்? [திண்மை:-உறுதிப்பாடு.]

இது, கற்புடைய பெண்ணின் பிறப்புப்போல மிக மேம்பட்டவை இல்லை யென்றது. ௫௪.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை, இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

இ-ள்:- புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை - தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல் நடக்கும் மேம்பட்ட நடை, இல்லை - இல்லையாம். [புரிந்த என்பது ஈற்று அகரம் கெட்டு நின்றது. ஏறு - எருது.]

பீடுநடை = அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

இது, கற்புடையா ளென்ற புகழைச் செய்த மனையாளை இல்லாதானை எல்லாரும் இகழ்வ ரென்றது. ௫௫.

ல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

இ-ள்:- இல்லவள் மாண்பானால் - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யுடையாளானால், இல்லது என் - இல்லாதது யாது? (எல்லாம் உளவாம்). இல்லவள் மாணாக்கடை - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யில்லாளானால், உள்ளது என் - உள்ளது யாது? (ஒன்றும் இல்லை).

இது, கற்புடைய மனையாளை உடையவன் எல்லாச் செல்வங்களையும் உடைய னென்றது. ௫௬.

ற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

௨௨