பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கட்பேறு

இ-ள்:- எழு பிறப்பும் தீயவை தீண்டா - எழு பிறப்பினும் துன்பங்கள் சாரா, பழி பிறங்காத பண்புடை மகன் பெறின் - (ஒரு பிறப்பிலே) பழியின் கண் மிகாத குணத்தினையுடைய மக்களைப் பெறுவாராயின்.[பிறங்காது என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது நன் மக்களைப் பெற்றார் எழுபிறப்பிலும் துன்புறா ரென்றது. ௬௨.

ம்பொருள் என்பதம் மக்கள், அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

இ-ள்:- தம்மக்கள் தம்பொருள் என்ப - தம்மக்களைத் தம்முடைய பொருள் என்று சொல்லுவர் (உலகத்தார்), அவர் பொருள் தம்தம் வினையால் வரும் - அம்மக்களாகிய பொருள் தம்தம்முடைய வினையால் வருதலான். [அவர் பொருள் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை.]

இது, தம்மக்கள் தம்பொரு ளென்பது. ௬௩.

மிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

இ-ள்:- தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம்முடைய மக்கள் சிறு கையாலே அளைந்த கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - (இனிமை யுடைத்தாகிய) அமிழ்தினும் மிக இனிது. [ஏகாரம் - அசை.]

இது, தம்மக்கள் கையால் அளையப்பட்ட உணவு தமக்கு மிக்க சுவை நல்கு மென்றது. ௬௪.

க்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் : மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

இ-ள்:- மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - தம்மக்கள் தமது உடம்பினைச் சார்தல் தம் உடம்பிற்கு இன்பமாம். அவர்

௨௫

4