பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவர் சொற்களைக் கேட்டல் தம் செவிக்கு இன்பமாம். [மற்று - அசை.]

இது, தம்மக்கள் தம்உடம்பில் சார்தலும் தம்மக்கள் சொல் தம்செவியில் படுதலும் தமக்கு இன்பம் பயக்கு மென்றது. ௬௫.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.

இ-ள்:- தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் - தம்மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலோசை இனிது யாழோசை இனிது என்று சொல்லுவர், (கேட்டவர் அவை இனிதென்று சொல்லார் என்றவாறு.)

இது, தம்மக்கள் சொல் அவ்விரண்டினும் இன்பம் பயக்கு மென்றது. ௬௬.

ம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம்மக்கள் அறிவுடைமை - தம்மக்கள் அறிவுடையாராதல், தம்மின் மாநிலத்து மன் உயிர்க்கெல்லாம் இனிது - தம்மைப் போல உலகத்து உயிர்கட்கெல்லாம் இனிதாம்.

இது, தம்மக்கள் அறிவுடைமையால் உலகமும் இன்பமுறு மென்றது. ௬௭.

ன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்,

இ-ள்:- ஈன்ற பொழுதின் பெரிது. உவக்கும் - தான்பெற்ற காலத்திலும் மிக மகிழும், தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைச் சான்றோ னென்று பிறர் சொல்லக் கேட்ட (காலத்துத்) தாய்.

௨௬