பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

டைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

இ-ள்:- உடைமையுள் இன்மை - உடைமையின் கண்ணே இல்லாமைபோல், விருந்து ஓம்பல் ஓம்பா மடமை - விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, மடவார்கண் உண்டு - பேதையார் மாட்டே உளதாம்.

[ஓம்பாத என்பது ஈறுகெட்டு நின்றது. இல்லாமைபோல - வறுமையுற்றிருந்தாற் போல.]

இது, விருந்தினரை ஓம்பாதார் அறிவிலா ரென்றது. ௮௯.

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து,

இ-ள்:-அனிச்சம் மோப்ப குழையும் - (எல்லா மலரினும் மெல்லிதாகிய) அனிச்சப்பூ மோந்தால் வாடும்; முகம் திரிந்து நோக்க விருந்து குழையும் - முகம் திரிந்து நோக்க விருந்தினர் வாடுவர். [அனிச்சம் என்பது ஆகுபெயர்.]

இது, விருந்தினரைத் திரிதலில்லாத முகத்தோடு நோக்க வேண்டு மென்றது. ௯0.

க0-வது.- வாய்மை யுடைமை.

வாய்மையாவது, பொய் சொல்லாமை. [அஃதாவது, தீமையில்லாத சொற்களைச் சொல்லுதல், இது விருந்தோம்பலின் கண்ணே இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாதலின், அதன்பின் கூறப் பட்டது.]

ன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இ-ள்:- தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்த்தபின் தன்நெஞ்சே

௩௪