பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

இ-ள்:- நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்-(இக்காலத்து நுகர்கின்ற) துன்பமெல்லாம் (முற்காலத்துப் பிறர்க்குத்) துன்பம் செய்தார் மாட்டே உள்ளனவாம்; (ஆதலால்), நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்-(இக்காலத்துப் பிறர்க்கு) துன்பத்தைச் செய்யார் (வருங்காலத்துத்) தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுவார்.

இஃது, எதிர் காலத்தில் துன்பம் நுகரவேண்டாதார் நிகழ்காலத்தில் துன்பம் செய்யலாகா தென்றது. ௧௬௯.

ன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்,

இ-ள்:- இன்னா செய்தாரை ஒறுத்தல்-இன்னாத செய்தாரை ஒறுக்குமாறு (என்னையெனின்), அவர் நாண நல் நயம் செய்து விடல்-அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றை (ஒருவன்) செய்துவிடுக (என்க).

[நயமுடையவற்றை-இன்பம் தரும் செயல்களை.]

இஃது, இன்னா செய்தாரை ஒறுக்கும் நெறி கூறிற்று. ௧௭0.

௧௮-வது-கொல்லாமை

கொல்லாமையாவது, யாதோர் உயிரையும் கொல்லாமை. இது, வெகுட்சி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது.

ன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

இ-ள்:- தன் உயிர் நீப்பினும்-(ஊனை உட்கொள்ளாக்கால்) தன் உயிர் நீங்குமாயினும், பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்

௬௨