பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

ள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருள்;
கள்ளத்தால் கள்வோம் எனல்.

இ-ள்:- பிறன்பொருள் உள்ளத்தால் உள்ளலும் தீது-பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; கள்ளத்தால் கள்வோம் எனல்-( ஆதலால், அதனை) மறைவினாலே கள்வோமென்று முயலா தொழிக. [ஏகாரம்-அசை. எனல்-எதிர்மறை வியங்கோள்.]

இது களவு தீ தென்றது. ௧௯௨.

ள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

இ-ள்:- கள்வார்க்கு-பிறர் பொருளைக் கள்வார்க்கு, உயிர் நிலை தள்ளும்-உயிர் நிலையாகிய வீடு (பெறுதல்) தப்பும்; கள்ளார்க்கு புத்தேள் உலகு தள்ளாது-கள்ளாதாருக்குத் தேவருலகம் (பெறுதல்) தப்பாது.

இது, கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளார் சுவர்க்கம் பெறாமையு மிலர் என்றது. ௧௯௩.

ளவினால் ஆகிய ஆக்கம், அளவிறந்
தாவது போலக் கெடும்.

இ-ள்:- களவினால் ஆகிய ஆக்கம்-களவிற்கொண்ட பொருளால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து ஆவதுபோல கெடும்-மேன்மேல் ஆவது போலக் கெடும்.

இது, களவினால் வரும் பொருள் நிலையா தென்றது. ௧௯௪.

ளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

இ-ள்:- களவின்கண் கன்றிய காதல்-களவின் மிக்க ஆசையானது, விளைவின் கண்- பயன்படும் காலத்து, வீயா விழுமம்

௭0