பக்கம்:திருவாசகத்தேன்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஒளி தரும். நீ, மணி, மணிகளுக்கெல்லாம் சிறந்த மணி. ஆதலால் என்னை வெறுத்து ஒதுக்காதே! நான் உன்னை வெறுத்ததற்குக் காரணம் நான் அல்ல. என்னுடைய வினைத் தொகுதி ஆட்டி வைத்தது. ஆதலால் என்னை ஒதுக்காமல் என் வினைத் தொகுதியை ஒறுத்திடு. எனக்குக் கேடு செய்யும் வினைகளிலிருந்து என்னை மீட்டு எடு! ஆண்டுகொள்: இறைவா, நான் சிறியவன்! வினைத் தொகுதி வசப்பட்டவன். ஐவரொடு போராடி வெற்றிபெற முடியாமல் தவிப்பவன். நீயோ, பெரியோன்! பிறவா யாக்கைப் பெரியோன்! நீ என் வினைகளைப் பொறுத்தாட் கொள்ளுதல் கடமை! நானாக ஒன்றும் செய்யவில்லை என் வினைகள் என்னைப் பொய் நெறியில் இழுத்துச் சென்றன. ஆனாலும் நான் தாய்! சிறு நாய்! நீ ஆட்கொண்டருளினால் உன்னை நினைந்தே வாழ்வேன் மறவேன்; பெரியோனாகிய தீ என் பிழை பொறுத்து என் வினைத் தொகுதியை ஒறுத்து என்னை. மீட்டு எடுத்து ஆண்டுகொள் என்று உருகுகிறார் மாணிக்கவாசகர்.

இறைவா, முன்பே ஒருதரம் ஆட்கொண்டாய் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டருளினை: அப்போது தான்்் என் உயிரைவே உனக்கு அர்ப்பணிப்புச் செய்தேன்: உரிமைப்படுத்தினேன்! என்னுடைய உடலையும் உனக்கே உரிமைப்படுத்தி உன்னுடைய அடிமையானேன்! அடிமைக்கு ஆர் என்று கூக்குரலிட்டேன். அடிமைக்கு உடைமைகள் ஏது? ஏன்? எதற்கு? ஆதலால் என்னுடைய உடைமைகளையும் உன்னிடமே ஒப்படைத்தேன்! நீ அவற்றையெல்லாம் ஆட்கொண்டபோது கொள்ள வில்லையோ? நீயே என் தலைவன் தியே என் ஆண்டான்: தான் அடிமை இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டா, இத்து தை ஆனால், இடையூறு வந்திருக்கிறது, வந்து கொண்டிருக்கிறது. தமக்கு அன்பு பட்டவர் பாரம் சுமப்பதற்கென்றே எட்டுத் தோள்களை - வலிமை மிக்க.