பக்கம்:திருவாசகத்தேன்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பிழை இருக்க வழியே இல்லை! ஆயின் என்னுடைய அறியாமையால் பிழையென்று கருதினேன்! நின்னருளைத் துணிந்து மறுத்தேன்.

'சிவாயநம' என்று சொல்லும் பேற்றினை அருளிச் செய்தனை! அன்றே எனது அல்லல்கள் அகன்றன என்று எண்ணியிருந்தேன். ஆனால், அல்லல்கள் அகன்ற பாடில்லை. மீண்டும் மலவாசனை தாக்குகிறது. பாசி படர்ந்த குளத்தில் பாசி அகன்றும் முழுதும் அகலாமல் உடன்புடர்தல் போல என்னை ஆணவம் அடர்த்துகிறது. நெய்க்குடத்தைச் சுற்றிலும் எறும்புகள் மொய்ப்பதைப் போல. வினைகள் என்னை மொய்க்கின்றன. அவா, வெள்ளம் போல் வந்து தாக்குகிறது! இறைவா, இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆட்கொண்டருளிய நீ, துன்பத்திற்குக் காரணமாகிய உடலை அகற்றாமல் வைத்து வாழவைத்து விட்டாய்! உடல் உள்ள அளவும் மலவாசனை இருக்கத்தானே செய்யும் வினைகளும் நீங்கா இறைவா! என்னை ஆட்கொண்டருளிய நீ என் உடலை நீக்காதது ஏன்?

இறைவா, இன்று என் பிழைகளை எண்ணி வெட்கப் படுகின்றேன்; வருத்தமுறுகின்றேன் ஆட்கொண்டருளிய உன்னையும் பிரித்துவிட்டேன்! திருப்பெருந்துறை சிவனே! நான் பொய்ம்மையுடையேன். ஆயினும் பெரியோனாகிய நீ கருணையினால் என் உடல் புகுந்து இடம் பிடித்து ஆட்கொண்டருளினை! ஆயினும் நின் கருணைப் பெருவெள்ளத்தை நினைந்து நினைந்து அழுகின்றேனில்லை. இரும்பின் பாவையனைய நான் ஆண்டருளிய நின்னைப் பிரிந்தேன்! அல்லல்களுக்கு ஆளானேன்! ஆயினும் செத்துப் போனேன் இல்லை! மண்ணில் வாழ் கின்றேன்! விழித்துக்கொண்டிருப்பதாக எண்ணினேன்; பாவித்தேன்! என் உள்ளக் கருத்தை மனத்துள் நின்ற கருத்தை இழந்தேன்! விழித்திருந்தும் இறந்த மூடர்களை இந்த உலகில் கண்டதுண்டா? என்ன செய்வது என்று