பக்கம்:திருவாசகத்தேன்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

போலத் தோன்றினாலும் அவை அறம் அல்ல; குறியெதிர்ப்பு உடையன.

இந்த விசாரசருமர் பற்றி- சண்டேசுவரர் பற்றி மாணிக்கவாசகர் பாடிய திருப்பாடல் சிந்தனைக்குரியது.

மாணிக்கவாசகர் 'தீதில்லை மாணி’ என்று தொடங்குகின்றார். ஆம் விசாரசருமர் இளம் வயதினர். அவருக்குத் தீய பயிற்சி இல்லை! தீய பழக்கங்களும் இல்லை! தூய்மையான வாழ்க்கையுடன் வளரும் இளைஞர் விசாரசருமர். தந்தையின் தாளைத் தடிந்த கொலைகாரர். என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதே என்ற முற்காப்புணர்வுடன் 'தீதில்லை மாணி' என்றார். 'தீதில்லை' என்று மட்டும் பொருள் கொண்டால் தன் தந்தையின் எச்சதத்தரின் காலை விசாரசருமர் தடிந்தது குற்றமும் இல்லை; தீமையும் இல்லை என்பதாகும். ஏன்? வழிவழி வளர்ந்து வந்துள்ள மரபுகளைக் காக்கும் கடமை பூண்ட ஒருவர் அந்த மரபுகளையே அழிப்பதை எங்ஙனம் ஏற்க முடியும் மரபுகளை அழித்தவர்கள்- அழித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்ந்தால் என்ன? இறந்தால். என்ன? அடுத்தடுத்து வரும். தலைமுறைகளுக்கு உள்ள கடமை, வரலாற்றைத் தூக்கிப் பிடிப்பதுதான். அதைக் செய்யாதவர்கள் இருப்பது எற்றுக்கு? என்று உணர வைக்கிறார் மாணிக்கவாசகர்.

எச்சதத்தர், விசாரசருமருக்கு என்ன தீங்கு செய்திருந்தாலும் மன்னிக்கப்பட்டிருப்பார். ஆனால் எச்சதத்தர் செய்ததோ திருமுழுக்குக்கு வைத்திருந்த புாற்குடத்தை இடறிவிட்டதாகும். எனவே, செழுந்தமிழ் வழக்குக்கும். தமது குறிக்கோளுக்கும் இடையூறு விளைவித்தமையால் தாதை தாள் தடியப்பட்டது. எந்த உறுப்பு தவறு: செய்ததோ அந்த உறுப்புக்குத்தான்தண்டனை தரப்பட்டது. ஆயிரம்தான் சொன்னாலும் எச்சதத்தர் தந்தை எச்சதத்தரும் வழிபடும் திருமேனிக்கு இடையூறு