பக்கம்:திருவாசகத்தேன்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கேட்டோம்" என்றே வேண்டுகிறார். பணி செய்தலே உய்யும் நெறி. "கொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை" என்று திருமுறை கூறும். இந்நெறியை உணர்த்தும் மாணிக்கவாசகர் பாடலை நினைத்து இறைவனை வேண்டுவோம்.

அது பழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதெள எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில் திரு வுத்தர கோச

மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா

எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்

எம் பெருமான் பள்ளி எழுந்தருளயே}}

(திருப்பள்ளியெழுச்சி-7)