பக்கம்:திருவாசகத்தேன்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யானே பொய், என் கெஞ்சும்
பொய்; என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்துறு மாறே !

(திருச்சதகம்- 9.0)

என்றும் பாடுகின்றார்.

அறிவ னே! அமு தேlஅடி நாயினேன்
அறிவ னாகக் கொன் டேன்,எனை ஆண்டது
அறிவி லாமையன் றே கண்டது ஆண்ட நாள்
அறிவ னோ வல்ல னோ அரு ரீசனே!

(திருச்சதகம்-50)

என்றும் அருளிச் செய்துள்ளார்.

மாணிக்கவாசகர் அறிவால் சிவமே என்று போற்றப் பெறும் அளவுக்கு உயர்ந்ததற்குக் காரணம் தம்மை உணர்ந்து தமது பழக்கங்களைத் தவிர்த்துப் பழகி சிவன் கழலே சார்பென்று உணர்ந்து சிவத்தினைச் சார்ந்து ஒழுகியதேயாம். மாணிக்கவாசகரிடம் ‘நான்’ கெட்டுப் போய்விட்டது; சிவமாம் தன்மை மேவிட்டது. ஆதலால், உலகியல் முன்னேற்றமானாலும் சரி, ஆன்மிக முன்னேற்ற மானாலும் சரி சுய விமர்சனம் தேவை. சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லையெனில் வளர்ச்சியில்லை; பிறர் விமர்சனத்தைத் தாங்கி மாற்றிக் கொள்பவர்கள் உய்ர்வார்கள்!