பக்கம்:திருவாசகத்தேன்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தூய துறவி- நல்லவராயினும் அவருக்கு வீடு பேறு கிடைக்கவில்லை. அவர் வாயிற்காவலராகிய நந்தீசரிடம் ‘நான்’ வந்திருக்கிறேன் என்று சொன்னதால் இறைவனின் ஆணை ‘நான்’ இழந்தபின் வரட்டும் என்பதாயிற்று! ஆதலால் ‘பொய்யும் யானும்’ சொர்க்கத்தில் புகா. பொய்யும் ‘யான்’ எனும் செருக்கும் உடையவர் சொர்க்கம் புகமுடியாது. புறத்தே தள்ளப்படுதல் உறுதி.

புறத்தேயிருந்து சொர்க்கத்திற்குள் புக அன்பு வேண்டும். அந்த அன்பு மெய்யன்பாக இருக்கவேண்டும். மெய்யன்பு என்று கூறியதால் அன்பிலும் போலி- பாசாங்கு இருப்பது உண்மையாகிறது. மெய்யன்பு என்பது காரண காரியங்களைக் கடந்த அன்பு. தூண்டுதல் தேவைப்படாத அன்பு. அன்பு, அன்புக்காகவே! இந்த அன்பு நெறி நின்று வாழ்வதில் துன்பம் வரினும் அன்பு குறையக்கூடாது. அன்பு வளர வேண்டும்.

இடிர்க ளையா தேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் கெறிபணியா ரேனும்- சுடர் உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்னெஞ் சவர்க்கு.

(அற்புதத் திருவந்தாதி- 2).

என்று அம்மையார் பாடினார்.

இந்த அன்பு நிரந்தரமானதாக இருக்கவேண்டும் என்பது, மாணிக்கவாசகரின் பிரார்த்தனை.

பரந்து பல் லாய மலரிட்டு முட்
டாதடி யே இறைஞ்சி
இரந்தவெல் லாம் எமக் கேபெற
லாம் என்னும் அன்பருள்ளம்