பக்கம்:திருவாசகத்தேன்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 167

வாழ்க்கைச் சட்டம்! அன்புடன் ஒன்றுவதுதான் விடுதலையும் முத்தியும்” என்றார் இராமதீர்த்தர்.

அன்புடையார் ஆன்மாவைத் தவிர மற்றொன்று அறியார். ‘மற்றொன்று அறியார்’ என்பது கடவுள் பக்தி முதல் சமூக வாழ்க்கை வரை பொருந்தும்.

மெய்யன்பு காட்டும் வல்லமை பெறவேண்டும். அதற்குத் தொண்டு செய்யவேண்டும். அன்புக்கு அரண் தொண்டு.

பொய்யைத் தவிர்த்தல், “யான்” இழத்தல், மெய்யன்பு காட்டுதல், சிவமும் அன்பும் தவிர மற்றொன்று அறியாதிருத்தல், தொண்டு செய்தல் ஆகியன மேற்கொண்டு ஒழுகினால் திருவருள் சித்திக்கும். மாணிக்க வாசகர் “யானும் பொய்யும் புறமே போந்தோம்” என்றும், “புறம் போகலொட்டேன்” என்றும் பாடுகின்றார். ஆம் புறம் போதலுக்கா பிறந்தோம்! மனித குலத்திலிருந்து புறம் போகமாட்டோம் என்று உறுதி கொள்வோம். அன்பால் நட்புச்செய்தோரிடமிருந்தும் அன்பு காட்டப்பெற்றவரிடமிருந்தும் பிரிய மாட்டோம் புறம் போக மாட்டோம்! நிச்சயமாகக் கடவுளிடத்திலிருந்து விலக மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

புறமே போக்தோம் பொய்யும்
யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா
வண்ணம் பெத்திறன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
முற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
நின்நாள் சேர்ந்தாரே!

(திருச்சதகம்- 86)