பக்கம்:திருவாசகத்தேன்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கையைச் சுமந்து திரிபவர்கள்கூடத் தாம் தாம் வாழ்வதாகத்தான் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் வாழ்வது உண்மையல்ல. அவர்கள் நடத்துவது வாழாத வாழ்க்கையேயாம். பயனற்றனவெல்லாம் இருந்தும் பயனில்லை, இறந்தாலும் பயனில்லை என்பது திரண்ட கருத்து.

மாணிக்கவாசகர் தமது நெஞ்சத்துக்கு ஆசைகளைக் காட்டித் தம்பால் அணைத்துக்கொள்ள முயன்று வெற்றி பெற்றுவிட்டார் என்பதைத் திருவாசகம் உணர்த்துகிறது. இறைவன்- சிவன் வலியவந்து இம்மண் புகுந்து குருந்த மரத்தடியில் காத்திருந்து ஆட்கொண்டான். நெஞ்சமே! அவனுடைய திருவடிகளைச் சிந்தனை செய்! திருவருட் சிந்தனையுடன் திருப்பெருந்துறையுறை சிவனிடம் உனக்கு வேண்டியதை இரந்து கேள்! திருப்பெருந்துறை சிவன் நீ கேட்கும் எல்லாவற்றையும் தருவான். திருப்பெருந்துறையுறை சிவன் பெருங் கருணையுடையவன் என்று தமது நெஞ்சை திருப்பெருந்துறையுறை சிவனிடம் ஆற்றுப் படுத்துகின்றார். தமது நெஞ்சத்தினை இரத்து கேட்கின்றார் மாணிக்கவாசகர். ஆணவத்துடன், தொடக்குண்டு ஆன்ம போத நிலையில் விளங்கிய ஆன்மாவின் பொறி, புலன்களைச் . சிவத் தன்மையுடையதாக்கிய திருப்பெருந்துறை இறைவனை- என்றும் பிரியாதிருந்தருள் செய்வானை வாயாரப் பேசு என்று கேட்டுக் கொள்கின்றார்.

"ஏ. நெஞ்சே! வேதங்கள்- பழமறைகள் ஐயா! ஐயா! என்று தேடியும் சிவம் என்னும் செய்பொருளை கண்டபாடில்லை! அந்த வேதங்களுக்கெல்லாம் நாயகனாகவும் வேதங்களையெல்லாம். கற்றறிந்தவனாகவும் விளங்கும் நான்முகனும் கண்டதில்லை. செல்வத்தின் தலைவன் திருமாலும் கண்டதில்லை. இறைவனை அறிவினாலும் பணத்தினாலும் காண இயலாது. இங்ங்ணம் நான்மறைகளாலும் நான்முகனாலும் திருமர-